/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
/
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 08, 2024 11:16 PM
உடுமலை:பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில் உள்ளது.
இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சாார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில், குறிப்பிட்ட துாரத்துக்கு, சென்டர் மீடியன் வைக்கப்பட்டது.
சமீபத்தில் ஆக்கிரமிப்புகளும் அப்பகுதியில், அகற்றப்பட்டன. ஆனால், உடுமலை ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக, உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், நெரிசல் குறையவில்லை.
எனவே, சந்திப்பின் மையப்பகுதிக்கு, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெரிசலை குறைக்க, உயர் மின் கோபுர விளக்கை மாற்றியமைக்க வேண்டும்.
சந்திப்பின் மையப்பகுதிக்கு, கோபுரத்தை இடம் மாற்றுவதால், அப்பகுதி ரவுண்டானா போல, மாறி விடும். தாராபுரம் மற்றும் உடுமலை ரோட்டுக்கு செல்லும், வாகனங்கள் எளிதாக விலகிச்செல்ல முடியும்.
தற்போது உடுமலை வழித்தட பஸ்கள் நிறுத்தும் இடத்தில், அதிக நெரிசல் ஏற்படுகிறது. பயணியர் நிற்பதற்கும் போதிய இடவசதியில்லை.
மேலும், பொள்ளாச்சி பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில், பயணியருக்கான கழிப்பிடம் கட்டித்தரவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மனு அனுப்பியும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.