/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு; பொங்கலூரில் தீவிர முயற்சி
/
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு; பொங்கலூரில் தீவிர முயற்சி
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு; பொங்கலூரில் தீவிர முயற்சி
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு; பொங்கலூரில் தீவிர முயற்சி
ADDED : மார் 10, 2024 12:58 AM

பொங்கலுார்:பொங்கலுார் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து வரும் மொத்த கழிவுநீரும், பொங்கலுார் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பள்ளத்தின் வழியாகச் செல்கிறது.
அருகில், அரசு உதவி பெறும் பள்ளி, குடியிருப்புகள், ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் ஆகியவை உள்ளன. இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொங்கலுாரில் கழிவுநீர் பிரச்னை தீராத தலைவலியாக உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், பொங்கலுார் ஊராட்சி, 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை கட்டி வருகிறது.
அதில் மூன்றில் ஒரு பங்கு நிதியை ஊராட்சியும் இரண்டு பங்கு நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. இதில், நீர் நிரப்பும்போது, முதல் தொட்டியில் ஆயில் கழிவுகள் அகற்றப்படும்; அடுத்தடுத்த தொட்டிக்கு தண்ணீர் செல்கிறது; தொட்டியில் கல் வாழை வளர்க்கப்படுகிறது. மொத்த கழிவுகளும் கல் வாழையால் உறிஞ்சப்படுகிறது. பின் அந்த தண்ணீரை விவசாய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் பொங்கலுாரில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

