ADDED : மார் 18, 2024 11:14 PM
அ நிறம் | அளவு
உடுமலை;உடுமலை வெஞ்சமடையில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அங்கு உடனடியாக இதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழநி ரோட்டில் விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது, வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அங்கு நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், அந்த பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற வரும் பயணியர், வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, பயணியர் நலன் கருதி, வெஞ்சமடையில் புதிதாக நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
