
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகர் மாவ ட்ட தே.மு.தி.க., அலுவலகத்தில் விஜயகாந்த் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது.
விஜயகாந்த் உருவப்படத்துக்கு அக்கட்சியினர் மலர் துாவி மெழுகுவர்த்தி ஏந்தி, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். துணை செயலாளர் அக்பர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 'வரும், 3 ம் தேதி காலை, 9:00 மணிக்கு, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து கட்சி, தொழில்துறையினர் சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி, மாநகராட்சி அலுவலகம் வரை, மவுன ஊர்வலம் நடத்துவது. அனைத்து கட்சியினர், சமூக, பொது நல அமைப்பினரை, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைப்பது,' என, முடிவெடுக்கப்பட்டது.