ADDED : செப் 21, 2026 04:02 AM

அ நிறம் | அளவு
திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் வடக்கு காமாட்சி அம்மன் கோவில் மைதானத்தில் சங்கமம் கலைக்குழு சார்பில் 18-வது வள்ளி கும்மி, 16-வது கம்பத்தாட்டம், 115-வது ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நடந்தது.
கடந்த ஒரு மாதமாக பயிற்சி பெற்ற 75-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்று, வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கம்பத்தாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தினர். கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமை வகித்தார். வள்ளி கும்மி ஆசிரியர் செல்லப்ப கவுண்டர் உள்ளிட்டோர் பாடல்களை பாடினர். ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
