/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட குட்டை திடல்; மக்கள் பாதிப்பு
/
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட குட்டை திடல்; மக்கள் பாதிப்பு
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட குட்டை திடல்; மக்கள் பாதிப்பு
குப்பை கிடங்காக மாற்றப்பட்ட குட்டை திடல்; மக்கள் பாதிப்பு
ADDED : மார் 17, 2025 12:08 AM

உடுமலை; உடுமலை நுாலகம் பகுதி, குப்பை கிடங்காகவும், திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துவதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உடுமலை தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியில், முதற்கிளை நுாலகம் அமைந்துள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் பயன்படுத்தும் இந்த நுாலகத்தின் பின் பகுதியில், நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும், குப்பை மற்றும் கழிவுகள் கொண்டு வந்து, கொட்டி இருப்பு வைக்கும் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், நுாலகத்திற்கு வரும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குப்பைக்கிடங்காக உள்ளதால், கொசுக்கடியும் அதிகரித்துள்ளது. எனவே, நுாலகம் பின் பகுதியை துாய்மைப்படுத்தவும், இப்பகுதியில் பசுமையான பூங்கா அமைக்கவும் வேண்டும்.
அதே போல், நாராயண கவி மணி மண்டபம், வணிக வளாகம் பகுதியும் குப்பை கிடங்காக மாற்றப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் குப்பை கொட்டும் மையத்தை மாற்றவும், துாய்மைப்பணி மேற்கொள்ளவும் வேண்டும்.