/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'
/
'சலனமற்ற மனநிலையே மாணவருக்கு சாதிக்க உதவும்'
ADDED : மார் 20, 2025 04:58 AM

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, குமரன் அரங்கில், தமிழ்மன்றம், தமிழ்த்துறை சார்பில், 'சமானியர்களே சாதனையாளர்களாக' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், நேற்று நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குமார் வரவேற்றார். இணை பேராசிரியர் பாலசுப்ரமணியன், உதவி பேராசிரியர் சிங்கமுத்து முன்னிலை வகித்தனர். திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஸ்ரீபிரியா பேசினார்.
உடுமலை அரசு கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் குணசேகரன் பேசுகையில், ''சாதித்த பல சாதனையாளர்கள் அவர்களுக்கான இலக்கை தெளிவாக மன உறுதியோடு திட்டமிட்டு வெற்றி பெற்றனர். வென்று காட்டினர். சலனமற்ற மனநிலையே மாணவர்களுக்கு சாதிக்க உதவும்,'' என்றார்.