/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துர்நாற்றம் வீசும் கிணறு; துார்வாருவது நன்று
/
துர்நாற்றம் வீசும் கிணறு; துார்வாருவது நன்று
ADDED : ஜூலை 23, 2025 11:24 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில் அங்கன்வாடி மையம் முன்னுள்ள கிணற்றை துார்வார வேண்டுமென பெற்றோர் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சி, 25வதுவார்டில் பாரதி நகர், 4வது வீதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இதில், 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மையம் எதிரிலேயே பொது கிணறு உள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், குப்பைகள் நிறைந்து, தண்ணீர் மாசு அடைந்து நிறம் மாறி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அங்கன்வாடி மையத்தில் உள்ளகுழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, கிணற்றில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, துார்வார நகராட்சிநிர்வாகத்திற்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.