/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிளிமஞ்சாரோ மலை உச்சியை எட்டினார் தண்டுவடப் பாதிப்பிலும் தளராத இளைஞர்
/
கிளிமஞ்சாரோ மலை உச்சியை எட்டினார் தண்டுவடப் பாதிப்பிலும் தளராத இளைஞர்
கிளிமஞ்சாரோ மலை உச்சியை எட்டினார் தண்டுவடப் பாதிப்பிலும் தளராத இளைஞர்
கிளிமஞ்சாரோ மலை உச்சியை எட்டினார் தண்டுவடப் பாதிப்பிலும் தளராத இளைஞர்
ADDED : ஜன 12, 2025 02:14 AM

ஆப்பிரிக்க கண்டத்தின், மிக உயரமான சிகரங்களில் ஒன்று, கிளிமஞ்சாரோ மலை. கடல் மட்டத்தில் இருந்து, 5,895 மீ., உயரத்தில் உள்ளது. திருப்பூர், பெரியார் காலனி, ஜே.எஸ்., கார்டனை சேர்ந்த கனிஷ் விஜயகுமார், 23, கடந்த, 2024 டிச., 5 ம் தேதி, அதிகாலை, 12:30 மணிக்கு, இம்மலையில் ஏற துவங்கி, காலை 7:25 மணிக்கு அதாவது ஏறத்தாழ ஏழு மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளார்.
கனிஷ் விஜயகுமார் கூறியதாவது:
சிறந்த பேட்மின்டன் வீரராக வேண்டும் என்பதற்காக, தினமும் எட்டு முதல், பத்து மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தேன். உடற்பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக முதுகுதண்டு வடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது; அறுவை சிகிச்சை எதுவும் செய்து கொள்ளாமல், சரிவிகித உணவு, உடற்பயிற்சியின் மூலம் இயல்புக்கு திரும்பினேன். உடல் அளவில் நான் 'பிட்' என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, சைக்கிள் பயிற்சி தீவிரமாக மேற்கொண்டேன். திருப்பூரில் இருந்து புதுச்சேரி அங்கிருந்து சென்னை சென்று, 1,000 கி.மீ., துாரத்தை ஆறு நாட்களில் கடந்து, பயணித்து, 'சுகாதார விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - 2022' மேற்கொண்டேன்.
தொடர்ந்து, உடல் ஒத்துழைத்ததால், மலையேற்றம் மீது ஆர்வம் அதிகமாகியது. கடந்த, 2023 டிச., மாதம் கடல் மட்டத்தில் இருந்து, 5,364 மீ., உயரம் கொண்ட எவரெஸ்ட் 'பேஸ்கேம்ப்' (ஆரம்பநிலை) சிகரத்தை அடைந்தேன், 2024 ஆக., மாதம் கடல் மட்டத்தில் இருந்து, 6,111 மீ., உயரம் கொண்ட 'யுனாம் சிகரம்' (மணாலியில் உள்ளது) ஏறினேன்.
தொடர் முயற்சி மற்றும் பயிற்சியால் மற்றும் டிச., மாதம் ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மலை தொடரில், 5,895 மீ., உயரத்தில் ஏறியுள்ளேன்.
இவ்வாறு, கனிஷ்குமார் கூறினார்.
கனிஷ், என்.ஜி.எம்., கல்லுாரியில் பி.காம்., முடித்துள்ளார். இவரது பெற்றோர் விஜயகுமார் - அபிராமி. கனிஷ், 'நடப்பாண்டில் எவரெஸ்ட் முழுஉயரத்தை (8,848 மீ.,) ஏறி, சாதனை படைக்க தயாராகி வருகிறேன்' என்கிறார்.