/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு ஆதார் மையங்கள் மீண்டும் இயக்கம்
/
தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு ஆதார் மையங்கள் மீண்டும் இயக்கம்
தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு ஆதார் மையங்கள் மீண்டும் இயக்கம்
தொழில்நுட்ப கோளாறு சீரமைப்பு ஆதார் மையங்கள் மீண்டும் இயக்கம்
ADDED : ஜூலை 11, 2025 11:35 PM
உடுமலை; 'சாப்ட்வேர் அப்டேட்டில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள ஆதார் மையங்கள் செயல்படாமல் முடங்கிய நிலையில், சரி செய்யப்பட்டு மீண்டும் செயல்பட துவங்கியுள்ளளது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில், அரசு கேபிள் நிறுவனம் சார்பில், ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொழில் நுட்ப கோளாறு, சாப்ட்வேர் அப்டேப் பணி காரணமாக, கடந்த, 1ம் தேதி முதல், ஆதார் மையங்கள் செயல்படாமல் முடங்கியது. இதனால், புதிய பதிவு, திருத்தங்கள் மேற்கொள்ள முடியாமல், பொதுமக்கள், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில்,' 'சாப்ட்வேர் வெர்ஷன்' புதுப்பிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆதார் மையங்களும் மீண்டும் இயங்கத்துவங்கியுள்ளன. உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகா அலுவலகங்களில் அமைந்துள்ள, 10 மையங்களும் செயல்பட துவங்கியுள்ளது,' என்றனர்.