ADDED : மார் 23, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மக்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை, தாலுகா வாரியாக சிறப்பு ஆதார் பதிவு முகாம் நடந்து வருகிறது.
ஊத்துக்குளி தாலுகாவில் நேற்று நடந்த முகாமில், புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டையில் செய்ய வேண்டிய திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்தனர்; நேற்றைய முகாமில், 63 பேருக்கு திருத்தம் கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது.