/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
/
மடத்துக்குளத்தில் நாளை ஆதார் சிறப்பு முகாம்
ADDED : மே 02, 2025 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் ஆதார் மையத்தில், நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 9 தாலுகாவில், அரசு கேபிள் நிறுவனம் வாயிலாக, ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட ஆதார் திருத்தம் மேற்கொள்ள, விடுமுறை தினங்களில், சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலுள்ள ஆதார் மையத்தில், சிறப்பு முகாம் நாளை (4ம் தேதி) நடக்கிறது. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.