/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரிய கருப்பராயன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா
/
பெரிய கருப்பராயன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா
ADDED : ஆக 06, 2025 10:54 PM

அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையத்தில் ஸ்ரீ பெரிய கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் ஆடி பொங்கல் திருவிழாவில், நேற்று குதிரை வாகனத்தில் கருப்பராயன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பேச்சியம்மனுக்கு மாவிளக்கு பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக ராயர்பாளையம் வீரமாத்தி அம்மன் கோவில் வீட்டிலிருந்து படைக்கலம், கிடாய் பொங்கல்; ஸ்ரீ பெரிய கருப்பராயன் கோவிலுக்கு புறப்படுதல், கருப்பராயன் அழைப்பு, வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நாளை மறுபூஜை மற்றும் போத்தம்பாளையம் கிராமம், ராயர்பாளையம் பூசாரிகள், பொதுமக்கள், போத்தங்குல செல்வந்தர்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.