/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை
/
முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை
ADDED : ஜூலை 20, 2025 11:25 PM

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிமாத கிருத்திகை நாளில், முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. முருக பக்தர்கள் விரதம் இருந்து, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகளில் பங்கேற்று வழிபடுவர்.
இந்தாண்டு ஆடி மாதம், இரண்டு முறை கிருத்திகை நட்சத்திர நாள் வருகிறது; முதலில், நேற்று ஆடிக்கிருத்திகை கொண்டாடப்பட்டது. வரும் ஆக., 16 ம் தேதி இரண்டாவது முறையாகவும் ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர், கொங்கணகிரி, மலைக்கோவில் குழந்தை வேலாயுசாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது.
ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக ஷண்முக சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.