அபாகஸ் பள்ளி மாணவர்கள் 'கருப்புப்பட்டை' வென்றனர்
அபாகஸ் பள்ளி மாணவர்கள் 'கருப்புப்பட்டை' வென்றனர்
ADDED : ஜூன் 06, 2026 03:14 AM

திருப்பூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எம்.கே.பி.கே. கராத்தே சாயிட்டோ ஹா சிட்டோரியு அமைப்பின் சார்பில் கடந்த மே 28 முதல் 30 வரை மாநில அளவிலான கராத்தே கருப்புப் பட்டைத் திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 71 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட 18 பேரில் திருப்பூர் அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியைச் சேர்ந்த மூவர் கருப்புப் பட்டையை (பிளாக் பெல்ட்) வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் சாதித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த இப்பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி அவ்யுக்தா, ஏழாம் வகுப்பு மாணவன் விசாக செந்தன் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவன் வர்சித் வேலவன் ஆகியோரை தாளாளர் வெங்கடாசலம், செயலாளர் சுரேஷ் பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா சுரேஷ், முதல்வர் ரம்யா மற்றும் கராத்தே பயிற்சியாளர் செந்தில் ஆகியோர் பாராட்டிச் சிறப்பித்தனர்.
