/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
/
பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
பள்ளிகளில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மாணவர்கள் கலைநிகழ்ச்சி அசத்தல்
ADDED : அக் 15, 2025 11:42 PM

-- நிருபர் குழு -
உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 94வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் மாலா அப்துல்கலாம் உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி மாணவ, மாணவியர், 'அப்துல்கலாம் அரும்பணிகள்' என்ற தலைப்பில் பேசினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், மாணவர்களை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாம் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி தின விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பராசக்தி ஆகியோர், அப்துல்கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதுகலை தமிழாசிரியர் கருப்பத்தாள் அப்துல்கலாம் குறித்து பேசினார். பள்ளி தாளாளர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சரவணன், அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். திட்ட அலுவலர் ஜான்பாஷா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். முதுகலை கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
* உடுமலை ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடந்த விழாவில், மாணவ, மாணவியர் அப்துல்கலாம் போல வேடமிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே, போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், 94வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ரபேல்ராஜ் தலைமை வகித்தார்.
பசுமைக்குரல் சமூக நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மகேந்திரன், முன்னாள் மாணவி லிபிதா ஆகியோர், அப்துல்கலாம் புகைப்படத்தை 'கிளாசிக் லேமினேட்' செய்து மாணவர்களுக்கு வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு அப்துல்கலாம் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.