/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆநிரை காக்கும் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிேஷகம்; உடுமலை அருகே கோவில் திருவிழா கோலாகலம்
/
ஆநிரை காக்கும் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிேஷகம்; உடுமலை அருகே கோவில் திருவிழா கோலாகலம்
ஆநிரை காக்கும் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிேஷகம்; உடுமலை அருகே கோவில் திருவிழா கோலாகலம்
ஆநிரை காக்கும் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிேஷகம்; உடுமலை அருகே கோவில் திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 17, 2025 12:21 AM

உடுமலை; உடுமலை அருகேயுள்ள, ஆல்கொண்டமால் கோவிலில், நாள் முழுவதும் பாலாபிேஷகம் நடந்த தோடு, கால்நடை செல்வம் பெருக, உருவாரங்கள் செலுத்தியும், கன்றுகள் தானம் வழங்கியும் பக்தர்கள் வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வ மான மால கோவில் எனப்படும் ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.
பொங்கல் பண்டிகையில், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் தமிழர் திருநாள் திருவிழா, இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.
நேற்று முன்தினம், உழவர் திருநாள் பூஜையுடன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்திருந்தனர்.
வேளாண் வளம், கால்நடை வளம் பெருக வேண்டி, கறந்த பாலை கொண்டு வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர். நாள் முழுவதும், விவசாயிகள் கொண்டு வந்த லட்சக்கணக்கான லிட்டர் பாலில் தொடர்ந்து அபிேஷகம் நடந்தால், ஆநிரை காத்த மாலன் வெண்ணிற கண்ணனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும், கால்நடை வளம் செழிக்கவும், நோய் நொடிகள் கால்நடைகளை தாக்காமல் இருக்க, நேர்த்திக்கடனாக, மாடு, ஆடு, நாய், குதிரை என உருவார பொம்மைகள் வைத்தும் வழிபட்டனர்.
கிராமங்களுக்கு என பொது காளையாக வளர்க்கப்படும், சலகெருதுகளை அலங்கரித்து, உருமி இசை, தேவராட்டம், சலகெருது ஆட்டம் என பாரம்பரிய முறையில், ஊர்வலமாக, மால கோவிலுக்கு அழைத்து வந்து, காளைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதோடு, தை முதல்நாள் பிறந்த கன்றுகள் சுவாமிக்கு சொந்தம் என்ற அடிப்படையில் கோவிலுக்கு தானம் கொடுப்பது வழக்கமாகும். அவ்வகையில், நேற்று ஏராளமான கன்றுகள், ஆடுகளை சுவாமிக்கு தானமாக வழங்கினர். திருவிழாவில், இன்று, மகா அபிேஷகம், அலங்கார பூஜையும், மாலை சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.