/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா அவிநாசி; போலீசார் விழிப்புணர்வு
/
விபத்தில்லா அவிநாசி; போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 20, 2024 11:13 PM

அவிநாசி; விபத்தில்லா அவிநாசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அவிநாசி போக்குவரத்து போலீசாரால் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டது.
விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் அவிநாசி போக்குவரத்து போலீசார், நெருக்கடியான சாலை பகுதிகளில் நெரிசல் ஏற்படாமலும் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் போலீசார் இருந்தால் மட்டுமே போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதும், மற்ற இடங்களில் விதிகளை மீறி பயணிப்பதும் தொடர்கிறது.
இதற்காக, 'விபத்தில்லா அவிநாசி' என்ற பெயரில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மங்கலம் ரோடு சந்திப்பில், வடக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவிநாசி பகுதியில் 'ஜீரோ ஏக்ஸிடென்ட்' என்ற நிகழ்ச்சியை போக்குவரத்து போலீசார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தினர்.
இதில், டூவீலர் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய செய்வது, கார், ஜீப், வேன் உட்பட நான்கு சக்கர வாகனங்களை இயக்குவோரை 'சீட்' பெல்ட் அணியச் சொல்வது போன்ற அறிவுரைகளை வழங்கினர். போக்குவரத்து விதி தொடர்பான துண்டு பிரசுரங்களையும் போலீசார் வினியோகித்தனர்.