/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விபத்து தடுப்பு கட்டமைப்பு பல்லடத்தில் அவசியம்'
/
'விபத்து தடுப்பு கட்டமைப்பு பல்லடத்தில் அவசியம்'
ADDED : ஜூலை 20, 2025 11:22 PM
பல்லடம்; பல்லடத்தில், விபத்து அபாயத்தை தவிர்த்து, வாகனங்கள் எளிதில் செல்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருமாறு, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு, நகர பா.ஜ., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம் நகர பா.ஜ., சார்பில், நகரத் தலைவர் பன்னீர்செல்வகுமார், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பியுள்ள மனு:
பல்லடம், பனப்பாளையம் செக்போஸ்ட் அருகே, திருப்பூர் செல்லும் வாகனங்கள் எளிதில் திரும்ப வசதியாக, பாலத்தை ஒட்டி தனி வழி ஏற்படுத்த வேண்டும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், ஆம்புலன்ஸ்கள் எளிதில் செல்ல வசதியாக, பனப்பாளையம் முதல் நால்ரோடு சிக்னல் வரை, தடுப்புகள் வைத்து தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும். நால்ரோடு சிக்னலில், மங்கலம் ரோடும், பொள்ளாச்சி ரோடும், நேர் எதிராக இல்லாமல், சற்று குறுக்கே உள்ளது.
இதை சரி செய்யும் வகையில், புதிதாக ஐலேண்ட் அமைக்க வேண்டும். பனப்பாளையம் மற்றும் பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, தேசிய நெடுஞ்சாலையில் ரோடு வளைந்தும் நெளிந்தும் இருப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில், இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்வதால், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.