/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்து அபாயம் உள்ள இடங்கள்: டிரைவருக்கு அறிவுறுத்த உத்தரவு
/
விபத்து அபாயம் உள்ள இடங்கள்: டிரைவருக்கு அறிவுறுத்த உத்தரவு
விபத்து அபாயம் உள்ள இடங்கள்: டிரைவருக்கு அறிவுறுத்த உத்தரவு
விபத்து அபாயம் உள்ள இடங்கள்: டிரைவருக்கு அறிவுறுத்த உத்தரவு
ADDED : பிப் 06, 2025 10:36 PM

திருப்பூர்; விபத்து அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் மிகுந்த கவனமுடன் அரசு பஸ்களை இயக்க, டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள் விபத்து நேரா வகையில் இயக்குவதற்கு, அரசு போக்குவரத்து கழகம் முனைப்பு காட்டுகிறது. முக்கிய வழித்தடங்களில் விபத்துகள் நிகழ வாய்ப்புள்ள, அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து, அதன் விபரத்தை டிரைவர்களுக்கு தெரிவித்து, கவனமுடன் பஸ்களை இயக்க அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, ''தேசிய நெடுஞ்சாலை, மாநில மற்றும் புறநகர சாலை சந்திப்புகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் குறித்த விபரத்தை, கோட்டம் மற்றும் கிளை அளவில் சேகரித்து, அதை வரைபடமாக்கி, இதற்கு முன் விபத்து ஏற்பட்டதற்கு யார் காரணம் உள்ளிட்ட விபரங்களை டிரைவர்களுக்கு விளக்க வேண்டும்.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் இணைந்து இப்பணியை உடனே மேற்கொள்ள வேண்டும்'' என உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறுகையில், ''அரசு பஸ் இயக்கத்தின் போது டிரைவர், நடத்துனர் செய்யும் தவறுகளை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், தொடர்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் எந்தெந்த பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்காக, விபத்து அபாயம் உள்ள பகுதியை கண்டறிந்து, கவனமுடன் பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.

