ADDED : பிப் 20, 2024 05:17 AM
உடுமலை: உடுமலை, தாராபுரம், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில், ஆண்டுக்கு சராசரியாக, 750க்கும் மேற்பட்டோர் சாலை விபத்து நிவாரண நிதி கோரி விண்ணப்பிக்கின்றனர்.
இதன்படி, சாலை விபத்து நிவாரண நிதியாக, ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய் வரை திருப்பூர் மாவட்டத்திற்கு தேவைப்படுகிறது. தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.
கடந்த, 2019 முதல் 2023 வரை, நிவாரண நிதி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ளது. தற்போதும், ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது.
எனவே, விபத்து நிவாரண நிதி சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் விபத்துகள், பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், மாவட்டத்துக்கு கூடுதல் நிவாரணத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
