/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரைகுறையாக மூடப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்
/
அரைகுறையாக மூடப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்
ADDED : மே 23, 2025 12:33 AM

பல்லடம், : பல்லடம் பகுதி நெடுஞ்சாலைகளில், அரைகுறையாக மூடப்பட்ட குழிகளால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் பகுதியில் நெடுஞ்சாலைகளில், குழாய் மற்றும் கேபிள் பதிப்பு பணிகளுக்காக, குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குழாய், கேபிள் பதிக்கப்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகள், அரைகுறையாக மூடப்பட்டுள்ளன. குழிகளில் மண் குவித்து வைக்கப்பட்டும், சில இடங்களில் பள்ளங்களாகவும் விடப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், குவித்து வைக்கப்பட்டுள்ள மண்கள், மழை நீரில் கரைந்து ரோடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. வாகன ஓட்டிகள் இவற்றால் சறுக்கி விழ வாய்ப்பு உள்ளது. மேலும், இரவு நேரங்களில், வெளிச்சமின்மை காரணமாக, குழிகள் மற்றும் மண் குவியியல்கள் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயத்தை சந்தித்து வருகின்றனர். குழிகள் அரைகுறையாக மூடப்பட்டதால், நெடுஞ்சாலைகளில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
மூடப்படாத பள்ளத்தால், திருப்பூரை சேர்ந்த தம்பதியர் சமீபத்தில் உயிரிழந்தனர். இருப்பினும், இது போன்ற அலட்சியங்கள் நீடித்து வருகின்றன.
அரைகுறையாக மூடப்பட்ட குழிகளை, சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.