தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விளம்பரத் தட்டிகளால் விபத்து அபாயம்

விளம்பரத் தட்டிகளால் விபத்து அபாயம்

விளம்பரத் தட்டிகளால் விபத்து அபாயம்


UPDATED : ஆக 19, 2026 06:54 PM

ADDED : ஆக 19, 2026 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 06:54 PM ADDED : ஆக 19, 2026 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:யூனியன் மில் ரோடு-யுனிவர்சல் ரோடு சந்திப்பில், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர தட்டிகள் வைக்கப்படுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பாலங்கள், வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைக்கப்பட்ட புதிய பாலமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் ரோடு சந்திப்பில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

முக்கிய சந்திப்பில் வைக்கப்படும் விளம்பர தட்டிகள், எதிரே வரும் வாகனங்களை மறைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக ராம் லட்சுமண் தியேட்டர் பகுதியில் அடிக்கடி விளம்பர தட்டிகள் வைக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, விபத்து அபாயம் உள்ள முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர தட்டிகள் வைப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us