/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்தில் விபத்து அபாயம்: தடுப்பு சுவர் அவசியம்
/
பாலத்தில் விபத்து அபாயம்: தடுப்பு சுவர் அவசியம்
ADDED : செப் 24, 2025 11:31 PM

உடுமலை: உடுமலை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்துக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே அமராவதி பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. முன்பு தேசிய நெடுஞ்சாலை அகலத்துக்கேற்ப பாலம் இல்லாமல் குறுகலாக இருந்ததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டின் அகலத்துக்கு ஏற்ப பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பாலத்தின் சுவர் போதிய உயரம் இல்லாத நிலையில், அருகில் தடுப்பு சுவரும் கட்டவில்லை. 'ரிப்ளெக்டர்' மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால், இரவு நேரங்களில் தடுமாறும் வாகனங்கள், கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. மேலும், அங்குள்ள கால்வாய் படிக்கட்டுக்கு செல்லும் மக்களும், பாதித்து வருகின்றனர்.
எனவே, பொதுப் பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பாலத்தின் அருகில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.