ADDED : நவ 29, 2025 07:22 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் - காங்கயம் ரோடு, செல்லாண்டியம்மன் கோவில் அருகே உயர் கோபுர மின் விளக்கின் கீழ் வைக்கப்பட்ட தடுப்புகள் சேதமடைந்து, ரோட்டில் வரும் வாகனங்கள் மீது இடிப்பது போல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது.
வளைவான இப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 'பீக் ஹவர்ஸ்' தருணங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி சேதமடைந்த தடுப்புகளை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
