ADDED : பிப் 15, 2026 06:12 AM

பல்லடம்: பல்லடம் -- வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில், ரோடு சரிவர சீரமைக்கப்படவில்லை. ரோட்டின் சில பகுதிகள் மேடு பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
பல்லடம் அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பனப்பாளையம் பகுதியில், ரோடு மேடு பள்ளங்களுடன் தாறுமாறாக இருப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். திடீர் மேடு பள்ளங்கள் வாகனங்களை அதன் போக்கில் இழுத்து செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
புகார் எழுந்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்காமல் உள்ளனர். எனவே, விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, மேற்கூறிய இடங்களில் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின்எதிர்பார்ப்பு.
