/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் விபத்துகள்
/
நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : ஜன 17, 2025 11:57 PM
உடுமலை,; உடுமலை, குறிச்சிக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பு பகுதி ஆக்கிரமிப்புகளால் குறுகியுள்ளது; விபத்துகள் அதிகரித்து வருகிறது.
உடுமலையிலிருந்து அமராவதி செல்லும் பிரதான ரோடும், பழநி, கொழுமம் ரோடு மற்றும் ஜல்லிபட்டி ரோடு ஆகிய நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதி உள்ளது.
இந்த சந்திப்பு பகுதியில், ரோட்டின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதோடு, கடைகளுக்கு வரும் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், ரோடு குறுகலாகி விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. மேலும், நான்கு ரோடுகளிலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, நான்கு ரோடு சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அளவீடு செய்து அகற்றி, ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.