நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், கணக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் - 2 பொது தேர்வில், 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அரசு பள்ளி அளவில் இப்பள்ளி மாணவி மல்லீஸ்வரி, 581 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம், விவேகா, 580 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும் பெற்றனர். பிரியதர்ஷினி, 559 மதிப்பெண் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
கணக்கு பதிவியல், வணிகவியல் ஆகிய 2 பாடத்தில், 4 பேர் 'சென்டம்' வாங்கி உள்ளனர். தேர்வு எழுதிய, 136 பேரில், 135 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதித்த மாணவ, மாணவியரை, தலைமையாசிரியர் பிச்சாண்டி, உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ், பி.டி.ஏ., தலைவர் சண்முகசுந்தரம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பாராட்டினர்.