/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஒழுக்கத்துடன் லட்சியத்தை அடையுங்கள்'
/
'ஒழுக்கத்துடன் லட்சியத்தை அடையுங்கள்'
ADDED : அக் 30, 2025 11:56 PM

திருப்பூர்:  அவிநாசி அடுத்த அம்மா பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு திடீர் ஆய்வு செய்தார்.
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து, மாணவர்களிடம் உணவு, அதன் சுவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார்.
காலை நேர வழிபாட்டு கூட்டத்தில், பங்கேற்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
உங்களை சுற்றி நிற்கும் ஆசிரியர்கள் நன்றாக ஒழுக்கத்துடன் படித்ததால், கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதுதான் லட்சிய முன்னேற்றம்.
இதேபோல் மாணவ, மாணவியர் தங்கள் வாழ்வில் முன்னேற ஒழுக்கத்துடன் கற்று லட்சியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பேச்சின் நடுவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களிடம், 'நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்' என்று கேட்டதற்கு சஞ்சனா என்ற மாணவி, 'போலீசாக வருவேன்' என்றும், தஸ்வத் என்ற மாணவர், 'நான் டாக்டர் ஆக வருவேன்,' என்றும் கூறினர்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, பதிவேடுகளையும் மாவட்ட  கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

