/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை; கோழிப்பண்ணையாளர்கள் மனு
/
இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை; கோழிப்பண்ணையாளர்கள் மனு
இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை; கோழிப்பண்ணையாளர்கள் மனு
இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை; கோழிப்பண்ணையாளர்கள் மனு
ADDED : ஜூன் 24, 2025 10:10 PM

உடுமலை; கோழிப்பண்ணை தொழிலுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகள், கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தினர் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர்.
இச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நேற்று காலை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
பின்னர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தனர். அதில், உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயம் சார்ந்த, கோழிப்பண்ணை தொழிலில், கணிசமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக கோழிப்பண்ணை அமைக்கும் போது, தனிநபர்கள், காழ்ப்புணர்ச்சி மற்றும் ஆதாயத்துக்காக பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
கடந்த, 2022ல், நீதிமன்றத்தில், மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த வழிகாட்டுதல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த தீர்ப்பு வரும் வரை, தற்போதுள்ள, புதிதாக அமைக்கும் பண்ணைகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவறாக, முன்னுதாரணமாக கொண்டு தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். இந்த அச்சுறுதல்களை தவிர்த்து, தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை அச்சங்கத்தினர் உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்திலும் கொடுத்தனர்.