/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலைப்பொருட்கள் விற்றதால் நடவடிக்கை
/
புகையிலைப்பொருட்கள் விற்றதால் நடவடிக்கை
ADDED : டிச 01, 2024 11:12 PM

திருப்பூர்; மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுச்சாமி மற்றும் கோடீஸ்வரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
நல்லுார் போலீசுக்கு எல்லைக்கு உட்பட்ட பள்ளிகள் அருகேயுள்ள, பெட்டி கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் அருகேயுள்ள மளிகை கடைகளில் ஆய்வு நடந்தது. ஆய்வின் போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 5 கடைகள் மூடப்பட்டது. அவற்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று தனி நபர்களுக்கு தலா 25ஆயிரம் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.