/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேண்டாத' வண்ணங்கள் வேண்டும் நடவடிக்கை
/
'வேண்டாத' வண்ணங்கள் வேண்டும் நடவடிக்கை
ADDED : ஜன 12, 2025 11:50 PM
திருப்பூர் சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கின்றன. ஒரு சொட்டு கூட சாயக்கழிவுநீரை வெளியேற்றாமல் இருப்பதால் கடந்த, 14 ஆண்டுகளில், சாயக்கழிவால் ஏற்பட்ட மாசு மறைந்தது.
முறைகேடாக இயங்கும் சிறிய சாய ஆலைகள் மற்றும் 'பட்டன் -ஜிப்'களுக்கு சாயமிடும் பட்டறைகளால், மீண்டும் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.
பாதாள சாக்கடை இணைப்பு இருந்தால், அதன் வாயிலாக சாயக்கழிவு வெளியேற்றப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், தொடர் ஆய்வு நடத்தினாலும், குடியிருப்புகளுக்கு மத்தியில் முறைகேடாக இயங்கும் சாயப்பட்டறை, 'பட்டன் மற்றும் ஜிப்'களுக்கு சாயமிடும் பட்டறைகள் சவாலாக மாறியுள்ளன.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் கூறுகையில், 'நடவடிக்கை இன்னும் கடுமையாக இருந்தால் மட்டுமே, முறைகேடான சாயப்பட்டறைகள் இயக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். நொய்யல் ஆற்றில் வண்ண நீர் கலவாமல் தடுக்கமுடியும்' என்றனர்.