/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளி மாநில தொழிலாளர் விவரம் உதவி கமிஷனர் அதிரடி உத்தரவு
/
வெளி மாநில தொழிலாளர் விவரம் உதவி கமிஷனர் அதிரடி உத்தரவு
வெளி மாநில தொழிலாளர் விவரம் உதவி கமிஷனர் அதிரடி உத்தரவு
வெளி மாநில தொழிலாளர் விவரம் உதவி கமிஷனர் அதிரடி உத்தரவு
ADDED : செப் 27, 2024 11:32 PM

திருப்பூர்: ''கடை மற்றும் நிறுவனங்கள், தொழிலாளர் துறை இணையதளத்தில், வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்,'' என, தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடைகள் மற்றும் நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகை வைத்தல், தொழிலாளருக்கு இருக்கை வசதிஏற்படுத்தி கொடுத்தல், குடிபெயர்ந்த தொழிலாளர் விவரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையாளர்கள், துணிக்கடை உரிமையாளர், வியாபாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்மொழியை முன்னிலைப்படுத்தாமல், பிற மொழிகளை முன்னிலை படுத்திய கடை மற்றும் நிறுவனங்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
உதவி கமிஷனர் ஜெயக்குமார் பேசியதாவது:
கடை மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகை, தமிழ்மொழியை முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்கள், ஆறு மாதத்துக்குள், இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, https://labour.tn.gov.in என்ற இணையதளத்தில், 'படிவம் Y'ல் விண்ணப்பித்து, பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த தொழிலாளர் விவரத்தையும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வெளிமாநில பணியாளர் பணியாற்றும் நிறுவனங்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து, பதிவுச்சான்றிதழ் பெறவேண்டும். இல்லாவிடில், மாதாந்திர ஆய்வு நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.