/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் 49 பேர் மீது நடவடிக்கை எடுப்பு
/
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் 49 பேர் மீது நடவடிக்கை எடுப்பு
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் 49 பேர் மீது நடவடிக்கை எடுப்பு
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் 49 பேர் மீது நடவடிக்கை எடுப்பு
ADDED : ஜன 29, 2024 11:03 PM
உடுமலை:விடுமுறை அளிக்காத, கடைகள் மற்றும் ஓட்டல்கள் என, 49 பேர் மீது, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய விடுமுறை தினத்தில், தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், விடுமுறை தினத்தன்றும் வழக்கம்போல நிறுவனங்களை நடத்தி, தொழிலாளர்களை பணிபுரியச் செய்கின்றனர்.
அவ்வகையில், குடியரசு தினம் தேசிய விடுமுறையாக இருந்தும், பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டன. அவ்வகையில், தொழிலாளர் துறையினர் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தினர். தொழிலாளர் பணியாற்றுவது குறித்து, முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதேநேரம், ஆய்வில், 41 கடைகள், 24 ஓட்டல்கள் என, 65 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது; அவற்றில், விதிமுறைகளுக்கு முரணாக இருந்த 49 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழிலாளர்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.