/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடைகளை கடந்து முன்னேறும் பெண்கள் நடிகை சுஹாசினி பெருமிதம்
/
தடைகளை கடந்து முன்னேறும் பெண்கள் நடிகை சுஹாசினி பெருமிதம்
தடைகளை கடந்து முன்னேறும் பெண்கள் நடிகை சுஹாசினி பெருமிதம்
தடைகளை கடந்து முன்னேறும் பெண்கள் நடிகை சுஹாசினி பெருமிதம்
ADDED : மார் 16, 2025 12:05 AM

திருப்பூர்: ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள வி.இ.டி., கலை கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், யுவராஜா முன்னிலை வகித்தனர். முன்னதாக, நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி, வேளாளர் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி, வேளாளர் நர்சிங் கல்லுாரி முதல்வர் அக்சயா; வேளாளர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் மல்லிகா, வேளாளர் மெட்ரிக் பள்ளி நிர்வாக அறங்காவலர் சென்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி மனித வள செயலாளர் நிவேதிதா, மகளிர் தினத்தின் சிறப்பு குறித்து பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகை சுஹாசினி பேசுகையில், ''ஒரு பெண் படித்துவிட்டால் அந்த குடும்பம் வளம் பெறும். ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவு பெற்று வரும் போது ஒட்டு மொத்த சமுதாயமே வளர்ச்சி பெறும். பெண்ணுக்கு சமூகம், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தடைகள் உள்ளன. இவற்றை கடந்து இன்றைய பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்,'' என்றார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியை மோகனசுந்தரி நன்றி கூறினார்.