/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு பொது பெட்டி சேர்ப்பு
/
ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு பொது பெட்டி சேர்ப்பு
ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு பொது பெட்டி சேர்ப்பு
ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸில் கூடுதலாக ஒரு பொது பெட்டி சேர்ப்பு
ADDED : மார் 17, 2024 01:35 AM
திருப்பூர்;எப்போது பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு பொது பெட்டி, வரும், 22ம் தேதி முதல் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு ரயில் பயணிகளை ஆறுதல் அடைய செய்துள்ளது.
தினமும் காலை, 6:00 மணிக்கு கேரளா மாநிலம், ஆலப்புழாவில் புறப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352) மூன்றாவது நாள் காலை, 10:35 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேர்கிறது. தன்பாத்தில் இருந்து தினமும் காலை 11:35க்கு புறப்படும் ரயில், மூன்றாவது நாள் மதியம், 3:15 மணிக்கு ஆலப்புழா வந்தடைகிறது.
இந்த ரயில், மூன்று முதல் வகுப்பு ஏ.சி., ஆறு படுக்கை வசதி, இரண்டு பொது உட்பட, 21 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. பயணிகள் சவுகரியத்தை கருத்தில் கொண்டு, முதல் வகுப்பு ஏ.சி., பெட்டி எண்ணிக்கை மூன்றில் இருந்து ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு படுக்கை வசதி, பொது பெட்டி வரும் 22ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இதனால், பொது பெட்டிகள் எண்ணிக்கை, மூன்றாக உயரவுள்ளது.
இதனால் இந்த ரயிலில் அவ்வப்போது பயணிக்கும் ரயில் பயணிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.