ADDED : ஜூன் 18, 2026 07:42 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 32 உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருந்தாலும், நகரின் மையப்பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அழைப்புகள் வரும்போது விபத்துகளில் சிக்கியவர்களைத் துரிதமாக மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால், மேலும் 5 புதிய ஆம்புலன்ஸ்கள் தேவை எனக் கேட்டு 108 ஆம்புலன்ஸ் மேலாண்மை அமைப்புக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பியுள்ளனர்.
