ADDED : மார் 22, 2026 05:04 AM
திருப்பூர்: ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய, 'அப்டேட்' விபரங்களுக்கு பலர் காத்திருப்பதை தவிர்க்க, தலைமை தபால் அலுவலகத்தில் கூடுதலாக மூன்று ஆதார் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
பொதுமக்கள் ஆதார் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் தபால்துறை சார்பில் தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் கவுன்டர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆதார் சேவைகளுக்கான அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஆதார் பதிவு, ஆதார் விபரம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், ஐந்து மற்றும் 15 வயது நிறைவு செய்த சிறுவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் ஆகியவற்றை மூன்று ஆதார் கவுன்டர்களில் தொடரலாம். மேலும், ஆதார் விவரங்களை சரியான முறையில் பராமரித்து, அவ்வப்போது புதுப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
