/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் பொருள் கூடுதல் ஒதுக்கீடு; கூட்டுறவு பணியாளர் எதிர்பார்ப்பு
/
ரேஷன் பொருள் கூடுதல் ஒதுக்கீடு; கூட்டுறவு பணியாளர் எதிர்பார்ப்பு
ரேஷன் பொருள் கூடுதல் ஒதுக்கீடு; கூட்டுறவு பணியாளர் எதிர்பார்ப்பு
ரேஷன் பொருள் கூடுதல் ஒதுக்கீடு; கூட்டுறவு பணியாளர் எதிர்பார்ப்பு
ADDED : நவ 24, 2024 11:56 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம் நேற்று, சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்ட அளவிலான, ரேஷன் பொருட்கள் வினியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வெளிமாவட்ட மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க, கூடுதலாக, 10 சதவீத பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரேஷன் பொருட்கள், வேலை நாட்களில், மாலை, 6:00 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களில் ரேஷன் பொருட்கள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும், கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.