/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாற்றில் கூடுதல் பாலம்; போக்குவரத்து நெருக்கடி குறையும்?
/
நல்லாற்றில் கூடுதல் பாலம்; போக்குவரத்து நெருக்கடி குறையும்?
நல்லாற்றில் கூடுதல் பாலம்; போக்குவரத்து நெருக்கடி குறையும்?
நல்லாற்றில் கூடுதல் பாலம்; போக்குவரத்து நெருக்கடி குறையும்?
ADDED : பிப் 12, 2025 12:25 AM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, பிச்சம்பாளையம் புதுாரில் இருந்து, போயம்பாளையம், ராஜா நகர் செல்லும் வகையில் நல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.
பாலம் கட்ட முதல்வரின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பகுதி நான்கு திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாயும், மாநகராட்சி பொது நிதி 69 லட்ச ரூபாயும் என மொத்தம் மூன்று கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை பிச்சம்பாளையம் புதுாரில் நடைபெற்றது.
மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி, முதலாம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் வேலம்மாள், தமிழ்ச்செல்வி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பாலம் கட்டுப்படுவதால், 16வது வார்டு பிச்சம்பாளையத்தில் இருந்து, போயம்பாளையம் ராஜா நகர், கங்கா நகர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல ஒரு இணைப்பாக இருக்கும். இதனால், பி.என்., ரோட்டில் போக்கு வரத்து நெருக்கடி குறையும் வாய்ப்பும் ஏற்படும்.

