/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி அமாவாசை கூடுதல் பஸ் இயக்கம்
/
ஆடி அமாவாசை கூடுதல் பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 22, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; 'ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு இன்றும், நாளையும் (23, 24ம் தேதி) கூடுதலாக, 10 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், நாளை (24ம் தேதி) திருப்பூரில் இருந்து பழநி வரையும், காங்கயத்தில் இருந்து, கொடுமுடி, பொள்ளாச்சி - ஆனைமலை, சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
'இவ்விரு நாட்களில் மட்டும், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

