தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் பஸ் இயக்கணும்

கூடுதல் பஸ் இயக்கணும்

கூடுதல் பஸ் இயக்கணும்


ADDED : அக் 28, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலையிலிருந்து, கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பொதுவாக பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கும், பெரும்பாலும் பஸ் போக்குவரத்தையே மேற்கொள்கின்றனர். இதன் வாயிலாக, அவர்களது பணிகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள், முதியவர்கள், பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us