ADDED : பிப் 08, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 26.50 லட்சம் ரூபாயும், ஊராட்சி சார்பில், 13.18 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. எம்.எல்.ஏ., விஜயகுமார், கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா, அ.தி.மு.க., ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.