'கூடுதல் பொறுப்புப்படி தேவை' சத்துணவு ஊழியர் எதிர்பார்ப்பு
'கூடுதல் பொறுப்புப்படி தேவை' சத்துணவு ஊழியர் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 23, 2026 05:21 PM
ADDED : ஜூலை 23, 2026 05:11 PM
அவிநாசி:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், அவிநாசி ஒன்றிய மாநாடு, அவிநாசி தேவாங்கர் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் சுமதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் நளினி வரவேற்றார். ஜெயஸ்ரீ தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட தலைவர் தனலட்சுமி, மாநில தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் நுார்ஜஹான் உள்ளிட்டோர் பேசினர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதியப் பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும்; மாணவர்களுக்கான சத்துணவுப் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும்; கூடுதல் பொறுப்புப் படியை 6,000 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும்; போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 16 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
