/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சுகாதாரம் மேம்பட துாய்மை காவலர்களை கூடுதலாக நியமிக்கணும்! பற்றாக்குறையால் தொடர்கதையான பாதிப்புகள்
/
கிராம சுகாதாரம் மேம்பட துாய்மை காவலர்களை கூடுதலாக நியமிக்கணும்! பற்றாக்குறையால் தொடர்கதையான பாதிப்புகள்
கிராம சுகாதாரம் மேம்பட துாய்மை காவலர்களை கூடுதலாக நியமிக்கணும்! பற்றாக்குறையால் தொடர்கதையான பாதிப்புகள்
கிராம சுகாதாரம் மேம்பட துாய்மை காவலர்களை கூடுதலாக நியமிக்கணும்! பற்றாக்குறையால் தொடர்கதையான பாதிப்புகள்
ADDED : ஜூலை 15, 2025 08:32 PM
உடுமலை; கிராமங்களில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதலாக துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்படாததால், திடக்கழிவு மேலாண்மை திட்டமும், சுகாதாரமும், பாதித்து வருகிறது; இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கூடுதலாக துாய்மை காவலர்கள் நியமிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், கடந்த சில ஆண்டுகளில், பல மடங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகரை ஒட்டிய ஊராட்சிகளில், வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த, 2018ல், இந்த ஊராட்சிகளில், துாய்மை பணிகளுக்காக, 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
குடியிருப்பில், 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்; முதலில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.
தற்போது, ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ், துாய்மை காவலர்களுக்கு, மாதத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
குறைந்த சம்பளத்தில், வீடுதோறும் சென்று மட்கும், மட்காத குப்பைகளை சேகரித்து, அவற்றை, ஊராட்சியின் இயற்கை உரக்குடிலுக்கு கொண்டு செல்லும் பணியில், துாய்மை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியில் தொய்வு
மேலும், அதிகரித்த வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நீண்ட காலமாக குறைந்த பணியாளர்களை கொண்டே குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால், நடைமுறை சிக்கல்களால், அப்பணியில் தொய்வு ஏற்படுகிறது.
குறைந்த சம்பளம்; கூடுதல் வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால், புதிதாக இப்பணிக்கு வரவும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பெரும்பாலான ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டமும், சுகாதாரமும் பாதித்து வருகிறது.
நிலைமையை சமாளிக்க, வீதிகளில், குப்பையை குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். பல வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பையை சேகரிக்கும் அவலமும் காணப்படுகிறது.
துாய்மைக்காவலர்களின் சம்பளத்தை அதிகரித்து, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ' கிராம குடியிருப்புகளில், அதிகரித்துள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக துாய்மை காவலர்கள் நியமிக்க வேண்டும். இதற்காக, கருத்துரு தயாரித்து, தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கையையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக செயல்படுத்த தேவையான துாய்மை காவலர்களை நியமிக்க வேண்டும்,' என்றனர்.
ஒருங்கிணைந்த கிடங்கு
ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி இயற்கை உரமாக மாற்றத்தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, போதிய இடவசதி இல்லாததால், பெரும்பாலான ஊராட்சிகளில், குப்பை கிடங்கு நிரம்பியுள்ளது.
அங்கிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் குடியிருப்புகளுக்கும், நீர்நிலைகளுக்கும் பறந்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, ஒன்றியந்தோறும் ஒரு ஒருங்கிணைந்த குப்பை கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் கோ�க்கை எழுந்தது.
இதனால், குப்பை கிடங்கு இல்லாமல், திறந்தவெளியில் குப்பையை எரிப்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது குறித்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் மனு அனுப்பியுள்ளனர்.

