/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் சிறப்பு பஸ் இயக்க உத்தரவு
/
கூடுதல் சிறப்பு பஸ் இயக்க உத்தரவு
ADDED : ஏப் 25, 2025 07:58 AM
திருப்பூர்; கோடை விடுமுறையை யொட்டி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும், சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க, கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கடந்த, 18ம் தேதி முதல், துவக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி உட்பட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று துவங்கி நாளை மறுநாள் வரை வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும், சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க, அனைத்து கிளை மேலாளர்களுக்கு, மண்டல மேலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''பொதுவாக வார இறுதி நாட்கள் என்றால், தொலைதுார பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். இன்று முகூர்த்த தினம்; நாளை (26ம் தேதி) சிவராத்திரி; வரும், 27ம் தேதி அமாவாசை. வழக்கமான கூட்டத்துடன் பள்ளி குழந்தைகளை வெளியூர் அழைத்துச் செல்லும் பெற்றோர் கூட்டமும் அதிகமாகும். வெளியூர் பயணம் அதிகரிக்கும். அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்'' என்றனர்.