தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம்

 அவிநாசியில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம்

 அவிநாசியில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம்


ADDED : ஜன 22, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை ஈஷா மையத்தின் சார்பில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம், அவிநாசியில் நடந்தது. அடுத்த மாதம், 15ம் தேதி மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தின் சார்பில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம் அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. சத்குரு சன்னதியில் இருந்து ஊர்வலமாக திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் ,சேவூர் கேம்பிரிட்ஜ் பள்ளி, சாந்தி வித்யாலயா மற்றும் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் காமாட்சி தாசர் மடம் மற்றும் திருமுருகன் பூண்டி ஏ.வி.பி. பள்ளி ஆகிய பகுதிகளுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக ரதம் ஊர்வலமாக சென்றது.

தொடர்ந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக ஆதியோகி சிலை ரதம் வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை, ஈஷா ஒருங்கிணைப்பாளர் ஜவகர் மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us