/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை
/
துாய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் சேர்க்கை
ADDED : அக் 01, 2024 12:06 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்யும் வகையில், சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முகாமைத் துவக்கி வைத்து, நல வாரியத்தில் இணைவதால் பெறப்படும் சலுகைகள் குறித்தும், பதிவு செய்யும் நடைமுறை, அதற்கான தகுதி, தேவைப்படும் ஆவணங்கள் ஆகியன குறித்து விளக்கினார்.
துணை கமிஷனர் சுல்தானா, மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை இது வரை தகுதியான துாய்மைப்பணியாளர்கள் ஏறத்தாழ 500 பேர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இதில் விடுபட்ட 100 பேர் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் 200 பேர் என மீதமுள்ள பணியாளர்களையும் நல வாரியத்தில் இணைக்க முகாம் நடத்தப்படுகிறது.
இதுவரை 'தாட்கோ' அலுவலகம் சென்று துாய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் இணைக்க விண்ணப்பித்து வந்தனர்.
இம்முகாம் வாயிலாக, நேரடியாக மாநகராட்சி அலுவலகத்திலேயே அவர்கள் நல வாரியத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.