ADDED : அக் 18, 2024 06:37 AM

திருப்பூர் : அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.,வினர் கொடியேற்றியும், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்., மாநில ஜெ. பேரவை இணை செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தனர். வரும்
n வாலிபாளையம் பகுதி அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலாளர் கேசவன் தலைமையில் விழா நடந்தது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., படங்களுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
n வளர்மதி பாலம் பகுதியில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில், சுற்றுலா வேன் ஓட்டுனர் சங்க கிளை துவக்க விழா நடந்தது. சங்கப் பெயர்ப் பலகை திறக்கப்பட்டு தொழிற்சங்க கொடியேற்றப்பட்டது.