தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 11, 2024 11:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், 18 இடங்களில், மனித சங்கிலி போராட்டம் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

தமிழகம் போதை பொருட்களின் தலைநகராக மாறிவிட்டதாக, அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது; தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்படுத்தியதாக கூறி, தி.மு.க.,வை கண்டித்து, நாளை (12ம் தேதி) மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில், மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு, காந்தி நகர் சிக்னல், பாண்டியன் நகர், போயம்பாளையம் பஸ் ஸ்டாப், கொங்கு மெயின் ரோடு, கோல்டன் நகர், அவிநாசிக்கவுண்டம்பாளையம். திருப்பூர் தெற்கில், மாநகராட்சி அலுவலகம் மற்றும் சி.டி.சி., கார்னர், டவுன்ஹால் முதல் எம்.ஜி.ஆர்., சிலை வரை, மங்கலம் ரோடு கருவம்பாளையம், ராக்கியாபாளையம், சந்தைப்பேட்டை பகுதிகள்.

காங்கயத்தில், நகராட்சி அலுவலகம், முத்துார் ரோடு, செல்வக்குமார் தியேட்டர் அருகில், சென்னிமலை பேரூராட்சி அலுவலகம் முன்பாக, மனித சங்கிலி நடக்க உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us